ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

மருந்துத் தொழில், மருத்துவக் கருவிகள் குறித்த உலகளாவிய பெரிய மாநாடு பெங்களூருவில் பிப்ரவரி 15ல் தொடக்கம்

“அடுத்த தலைமுறைக்கான மருந்து உற்பத்தி” என்ற கருப்பொருளில் அமைந்த நிகழ்ச்சி எதிர்காலத் தேவைக்கான மருந்து உற்பத்தியில் சாதகமான மேம்பாடு சார்ந்திருக்கும்: திரு. அனந்த்குமார்

Posted On: 13 FEB 2018 9:51AM by PIB Chennai

இந்திய மருந்துகள் துறை (Department of Pharmaceuticals), மத்திய ரசாயனம் மற்றும் உர அமைச்சகம் (Ministry of Chemicals and Fertilizers), இந்தியத் தொழில் மற்றும் வர்த்தகக் சபைகளின் கூட்டமைப்பு (Federation of Indian Chambers of Commerce & Industry - FICCI) ஆகியவை இணைந்து மூன்றாவது உலக கண்காட்சி மற்றும் மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்துள்ளன. “விலை குறைந்த மற்றும் தரமான மருத்துவம்” என்ற தலைப்பிலான இந்த மாநாடு பெங்களூருவில் பிப்ரவரி 15ம் தேதி முதல் 17ம் தேதி வரையில் நடைபெறும்.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் திரு. அனந்த்குமார் தொடங்கிவைத்து, சிறப்பு உரையாற்றுகிறார். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் திரு. ஜே.பி. நட்டா, கர்நாடக முதலமைச்சர் திரு. சித்தராமையா, மத்திய ரசாயனம், உரங்கள், சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் திரு. மான்சுக் எல். மாண்டவியா ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

“அடுத்த தலைமுறைக்கான மருந்து உற்பத்தி என்ற தலைப்பிலான இந்த மாநாடு எதிர்காலத் தேவைக்கு ஏற்ற உயிரிப் பொருள் சார்ந்த மருந்துகளை உற்பத்தி செய்வதை மேம்படுத்துவதற்கு உரிய சாதகமான நடவடிக்கையாக அமையும். அத்துடன் இந்தியாவில் மருந்துகள் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் துணைபுரிவதாகவும் அமையும்” என்று திரு. அனந்த்குமார் கூறினார்.

“மூன்றாவது முறையாக நடைபெறும் இந்த மாநாடு சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் போதிய பலனளிக்கும். மேலும், இந்தக் கண்காட்சி வரும் காலங்களில் பெரிதும் வளர்ச்சி அடைந்து, ஆசியாவிலேயே மருந்துகள் துறையில் மிகப் பெரிய கண்காட்சியாக விசுவரூபம் எடுக்கும்”  என்றார்.

“இந்திய மருந்துகள் மற்றும் இந்திய மருத்துவ உபகரணங்கள் 2018” என்ற இந்த மாநாட்டில் மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகள் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்களுடன் அரசின் கொள்கை, தொழில்நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியவை குறித்து அமைச்சர் திரு. அனந்த்குமார் விவாதிக்கும் வகையில் ஒரு வட்டமேசை மாநாடு இடம்பெறும். இந்த நிகழ்ச்சியில் அனைத்து மருந்து உற்பத்தி நிறுவனங்களும், மருத்துவக் கருவிகள் நிறுவனங்களும் ஒரே குடையின் கீழ் இணைவர்.  நூற்றுக்கணக்கான    பேராளர்கள், பிற நாடுகளிலிருந்து வரும் 50 ஏற்பாட்டாளர்கள் பங்கேற்பர். இது தவிர, 50 புதிய நிறுவனங்கள் (50 startups) தங்களது உற்பத்தி மருந்துப் பொருட்களை அங்கு நடைபெறும் மிகப் பெரிய கண்காட்சியில் வைத்திருப்பர். இவற்றுடன் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள 90 முன்னணி நிறுவனத்தினர் மூன்று நாள் நிகழ்ச்சிகளிலும் பேசுவர்.

இருபதுக்கும் மேற்பட்ட சர்வதேச மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகள் ஆகியவற்றின் ஒழுங்குமுறை  அமைப்புகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். காமன்வெல்த் நாடுகள் (CIS) மற்றும் வங்கக் கடலில் அமைந்த நாடுகளுக்கு இடையில் பன்முக தொழில்நுட்ப மற்றும் பொருளாதாரக் கூட்டுக்கான முனைப்பு  அமைப்பு (BIMSTEC) ஆகிவயற்றின் பிரதிநிதிகளும் இந்த மாட்டில் பங்கேற்கிறார்கள். இந்திய மருந்துகள் மற்றும் இந்திய மருத்துவக் கருவிகள் 2018 குறித்த இந்த மாநாட்டின் மிக முக்கியமான அம்சமாக “ஒழுங்காற்று நடைமுறைக்கான வலுவூட்டல் மற்றும் முன் தகுதிகள்” என்ற தலைப்பில் உலக சுகாதார நிறுவனம் சார்பில் நடத்தப்படும் பயிலரங்கு விளங்குகிறது. இது தவிர, தேசிய சாஃப்ட்வேர் மற்றும் சேவைகள் நிறுவன சங்கம் (NASSCOM) சார்பில் “மருந்துகள், மருத்துவக் கருவிகள் மற்றும் மருத்துவம் சார்ந்த தொழில்களில் புதுமையாக்கம் மூலம் ஏற்படும் டிஜிட்டல் மாற்றம்” என்ற தலைப்பில் மாநாடு நடத்தப்படுகிறது. இவற்றுடன், இந்திய மருந்துகள் மற்றும் இந்திய மருத்துவக் கருவிகளுக்கான விருதுகள் (India Pharma & India Medical Device Awards ) குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். இந்நிகழ்வில் மருந்து உற்பத்தித் தொழிலிலும் மருத்துவக் கருவிகள் உற்பத்தித் தொழிலிலும் சிறந்த பணியாற்றியவர்கள், புதுமைகளைச் செய்பவர்களைப் போற்றும் வகையில் இந்த விருதுகள் அளிக்கப்படுகின்றன..

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், இந்தியாவில் மருந்துகள் உற்பத்தித் தொழிலில் புதியன கண்டறிதல் (Discovering Innovative Medicines in India), மருத்துவக் கருவிகள் உற்பத்தியில் உலகளாவிய விநியோகச் சங்கலியில் இந்தியாவை இடம்பெறச் செய்வது (Making India a Part of Global Supply Chain in Medical Devices), உயிரிப் பொருள் சார்ந்த பொருட்களை மேம்படுத்துவதில் எதிர்கொள்ளும் சவால்கள், வாய்ப்புகள், ஒழுங்குமுறைத் தேவைகள் (Opportunities, Challenges and Regulatory Requirements in the Development of Biologics), ஸ்டெம்செல்கள் மற்றும் மீளுவுருவாக்கத்துக்கான மருந்துகள் (Opportunities & Challenges for Stem cells & Regenerative Medicine), தன் உடல்நலம் பேணலில் மாறி வரும் மாற்றம் (Emerging Global Trends in Self Care), இந்திய உடல்நல நடைமுறைகளில் எதிர் மருந்துக்கான ஒழுங்குமுறை (Relevance of  OTC Regulatory Framework for Indian Public Healthcare System) ஆகிய தலைப்புகளில் தொழில்நுட்ப அமர்வுகள் இடம்பெறும்.

 

மாநாடு குறித்த தகவல்கள் கொண்ட சமூக வலைதளங்கள்:

India Pharma 2018: HASHTAG: #INDIAPHARMA

இணையம்: www.indiapharmaexpo.in (ஊடகங்களின் வசதிக்காக நேரடி இணைய ஒளிபரப்பு)

ஃபேஸ்புக்: https://www.facebook.com/indiapharma2018

டுவிட்டர்: https://twitter.com/indiapharma2018

இன்ஸ்டிகிராம்: https://www.instagram.com/indiapharma2018/

 

இந்திய மருத்துவக் கருவி (India Medical Device 2018): HASHTAG: #INDIAMEDICALDEVICE

 

இணையம்: www.indiamediexpo.in (for LIVE WEBCAST of Sessions open for Media)

ஃபேஸ்புக்: https://www.facebook.com/indiamedicaldevice/

டுவிட்டர்: https://twitter.com/Indiamedical18

இன்ஸ்டிகிராம்: https://www.instagram.com/indiamedical18/

 

*****



(Release ID: 1520523) Visitor Counter : 294


Read this release in: English , Hindi , Urdu