பிரதமர் அலுவலகம்
தவத்திரு பிரமுக் ஸ்வாமி மகாராஜின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி
प्रविष्टि तिथि:
27 NOV 2017 9:48AM by PIB Chennai
தவத்திரு பிரமுக் ஸ்வாமி மகாராஜுக்கு அவரது பிறந்த தினத்தையொட்டி, பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
“தவத்திரு பிரமுக் ஸ்வாமி மகாராஜின் பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு தலைவணங்குவதில், உலகம் முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்களுடன் நானும் இணைகிறேன். அவரது அற்புதமான சேவைகள் மற்றும் மனிதநேய செயல்பாடுகள், ஏராளமான மனிதர்களுக்கு எண்ணிலடங்கா பலன்களை அளித்துள்ளன.
தவத்திரு பிரமுக் ஸ்வாமி மகாராஜின் உயர்ந்த எண்ணங்கள், தொடர்ந்து மக்களுக்கு அனைத்து தடைகளையும் உடைத்தெறிய வழிகாட்டியாக திகழ்கிறது. ஏழை, எளிய மற்றும் பின்தங்கிய மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்த, அவரது தொலைநோக்கு எண்ணங்கள் நம்மை எப்போதும் ஊக்குவித்து வருகின்றன.
தவத்திரு பிரமுக் ஸ்வாமி மகாராஜுடன் எனக்கு உள்ள தொடர்பு சிறப்பு வாய்ந்தது. அவருடன் நான் இருந்த நேரங்கள், மறக்க முடியாதவை. அவரிடம் ஆசி பெறும் பேற்றை நான் பெற்றேன். அவரைப் பற்றி, சரங்பூர் பகுதியில் கடந்த ஆண்டு நான் ஆற்றிய உரையை https://www.youtube.com/watch?v=azaYIrMsx5g என்ற வலைதளத்தில் காணலாம்,” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
****
(रिलीज़ आईडी: 1510972)
आगंतुक पटल : 146