மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காசி தமிழ் சங்கமம் 5.0: நமோ படித்துறையில் திருக்குறள் சார்ந்த போட்டிகளில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 29 NOV 2026 7:47PM by PIB Chennai

காசி தமிழ் சங்கமம் 5.0-ன் ஒரு பகுதியாக, இன்று நமோ படித்துறையில்  திருக்குறளை மையமாகக் கொண்ட கதை, ஓவியம், விநாடி-வினா போட்டிகள் நடைபெற்றன. தேசிய புத்தக அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த இந்தப் போட்டிகளில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

நமோ படித்துறையில் அமைக்கப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட அரங்குகளில் தமிழ் நாடு, காசியின் கைவினைப் பொருட்கள், பாரம்பரிய தயாரிப்புகள், கலாச்சாரப் பாரம்பரியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர தினமும் மாலை நேரத்தில் கலாச்சார நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இன்று நடைபெற்ற நிகழ்ச்சிகளில், திருச்சிராப்பள்ளி கலைஞர்களின் நாட்டுப்புற நடனம், வாரணாசியைச் சேர்ந்த கலைஞரின் பஜனைகள், சென்னையைச் சேர்ந்த குழுவினரின் பாரம்பரிய நடனம் ஆகியவை இடம்பெற்றன.

காசி தமிழ் சங்கமம் 5.0-ஐ முன்னிட்டு, தமிழ்நாட்டிலிருந்து பயிற்சி பெற்ற 50 ஆசிரியர்கள், வாரணாசி, பிரயாக்ராஜ், அயோத்தியில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 30 முதல் 10 பணி நாட்களுக்குத்  திருக்குறளின் கருத்துகளையும் மாண்புகளையும் கற்பிக்கவுள்ளனர். இதற்கான அறிமுகப் பயிற்சி அமர்வு, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2343552&reg=3&lang=1&_gl=1

****

SS/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2343571) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Gujarati , Telugu , Kannada