இடுகை இடப்பட்ட நாள்:
29 NOV 2026 7:43PM by PIB Chennai
புதுதில்லி தேசிய உயரியல் பூங்கா சார்பில், பொதுமக்களிடையே இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 23-வது ஞாயிற்றுக்கிழமையாக பறவைகள் பார்வையிடும் பறவைகள் நடை நிகழ்ச்சி இன்று (2026 நவம்பர் 29) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இயற்கை ஆர்வலர்கள், மாணவர்கள், வனவிலங்கு புகைப்படக் கலைஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தன்னார்வலர்களின் வழிகாட்டுதலுடன் பூங்காவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அவர்கள் பறவைகளைப் பார்வையிட்டனர். அவற்றின் வகைகள், பழக்கவழக்கங்கள், வாழிடங்கள், சுற்றுச்சூழலில் அவற்றின் பங்கு ஆகியவற்றைப் பற்றியும் அறிந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 44 வகைகளைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட பறவைகள் பதிவு செய்யப்பட்டன. இது பூங்காவில் உள்ள பறவைகளின் பன்முகத்தன்மையை ஆவணப்படுத்த உதவியது. இயற்கையாகவே பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல், சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாத்தல், ஆகியவற்றில் பறவைகளின் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டது.
தேசிய உயிரியல் பூங்கா இயக்குநர் டாக்டர் சஞ்சீத் குமார், அதிகாரிகளுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவர் பேசுகையில், இதுபோன்ற நிகழ்ச்சிகள் மக்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்தும் என்றார்.
இந்தப் பறவைகள் பார்வையிடும் நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்படுகிறது. ஒவ்வொரு முறையும் 20 முதல் 25 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். திங்கள் முதல் வெள்ளி வரை முன்பதிவு செய்யலாம். முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தேசிய உயிரியல் பூங்காவின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செயலி மூலம் பதிவு செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2343549®=3&lang=1
****
SS/PLM/RJ