ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பனிக்காலத்தில் ரயில்களைப் பாதுகாப்பாக இயக்குவது குறித்து ஆலோசனைக் கூட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 29 NOV 2026 7:08PM by PIB Chennai

ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவின் அறிவுறுத்தலின்படி, ரயில்வே வாரியத் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான திரு சதீஷ் குமார், இன்று (29.11.2026) காணொலிக் காட்சி மூலம் மண்டல ரயில்வேக்கள், கோட்டங்களின் பனிக்கால முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார். இதில் ரயில்வே வாரிய உறுப்பினர்கள், மண்டல ரயில்வே பொது மேலாளர்கள், கோட்ட மேலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

பனிமூட்டம் நிலவும் காலத்தில் ரயில்களைப் பாதுகாப்பாக இயக்குவது குறித்து இதில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தண்டவாளங்களில் தொடர்ந்து ரோந்துப் பணிகளை மேற்கொள்ளவும், ரோந்துப் பணியாளர்களுக்குத் தேவையான பாதுகாப்புக் கருவிகளை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது.

குறைந்த வெளிச்சத்திலும் ரயில்களைப் பாதுகாப்பாக இயக்குவதற்கு ரயில் ஓட்டுநர்களுக்குப் பனிமூட்டப் பாதுகாப்புக் கருவிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சிக்னல்கள், ரயில்வே கடவுப்பாதைகளில் சுண்ணாம்புக் குறியீடுகள், ஒளிரும் பட்டைகள் அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ரயிலின் கடைசிப் பெட்டியில் சிவப்பு விளக்கும், 'X' குறியீடும் தெளிவாகத் தெரிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

அறிவிப்புப் பலகைகளை முறையாகப் பராமரிக்கவும், ஊழியர்களுக்குப் பனிக்காலப் பாதுகாப்புப் பயிற்சி அளிக்கவும் கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது.

அதிகாரிகள் இரவு நேர ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் எனவும், ரயில் இயக்கத்தில் ஏற்படும் தாமதங்களைச் சமாளிக்கப் போதிய மாற்று ரயில் பெட்டிகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்து, அனைத்து நிலைகளிலும் விதிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என மண்டல ரயில்வே பொது மேலாளர்களுக்கும், கோட்ட மேலாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2343530&reg=3&lang=1

****

SS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2343564) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , हिन्दी , Gujarati , Kannada