வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆப்பிரிக்காவில் இந்தியப் பொருட்களுக்குப் புதிய சந்தை வாய்ப்புகள்: டோகோ சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினர் நாடாக இந்தியா பங்கேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 29 NOV 2026 3:48PM by PIB Chennai

மேற்கு ஆப்பிரிக்க நாடான டோகோவில் நடைபெறும் 21-வது லோமே சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் இந்தியா சிறப்பு விருந்தினர் நாடாகப் பங்கேற்றுள்ளது. 2026 நவம்பர் 27 முதல் டிசம்பர் 13 வரை நடைபெறும் இந்தக் கண்காட்சி, இரு நாடுகளின் வர்த்தகம், முதலீடு ஆகியவற்றை மேம்படுத்த உதவும்.

டோகோ பொருளாதாரத் துறை அமைச்சர் திரு படானம் படோகி 2026 நவம்பர் 27-ம் தேதி இக்கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். இதில் 20 நாடுகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

இந்திய அரங்கில் வேளாண்மை, உணவுப் பதனப்படுத்துதல், மருந்துகள், மருத்துவம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பொறியியல், ஜவுளி, தொழில்நுட்பம் ஆகிய துறைகளின் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய வேளாண், பதனப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான அபேடா, இந்திய உணவுப் பொருட்களுக்கு டோகோ உள்ளிட்ட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.

நேற்று (2026 நவம்பர் 28) இந்திய தினம் கொண்டாடப்பட்டது. இதில் இந்தியாவின் தொழில் வளர்ச்சி, தொழில்நுட்பத் திறன், முதலீட்டு வாய்ப்புகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டன. இந்தக் கண்காட்சி மூலம் ஆப்பிரிக்க நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தக உறவு விரிவடையும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2343460&reg=3&lang=1

****

SS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2343561) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , हिन्दी , Gujarati