இடுகை இடப்பட்ட நாள்:
28 NOV 2026 10:40PM by PIB Chennai
மகாராஷ்டிராவின் கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் (என்டிஏ) 151-வது பிரிவுப் பயிற்சியை முடித்த மாணவர்களுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கலந்துரையாடினார். நாளை (2026 நவம்பர் 29) நடைபெறவுள்ள அணிவகுப்புக்கு முன்பு இன்று (2026 நவம்பர் 28) இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதில் மாணவர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.
பயிற்சியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் இந்த இளம் வீரர்கள் நாட்டின் பாதுகாப்புக் கேடயங்களாகத் திகழ்வார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் எல்லைகள் பாதுகாப்பாக இருந்தால்தான் வர்த்தகம், கல்வி, மருத்துவம், தொழில்துறை ஆகியவை வளர்ச்சி அடையும் என்று அவர் தெரிவித்தார். எல்லையில் பணியாற்றும் வீரர்கள் நாட்டின் நிலப்பரப்பை மட்டுமின்றி, நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் பள்ளிகள், மருத்துவமனைகள், பிற நிறுவனங்களையும் பாதுகாப்பதாக அவர் கூறினார்.
என்டிஏ பயிற்சி உடல் வலிமையை மட்டுமின்றி, ஒழுக்கம், தலைமைப் பண்பு, நல்ல குணநலன்கள் ஆகியவற்றையும் வளர்ப்பதாக அவர் தெரிவித்தார்.
நவம்பர் 29-ம் தேதி நடைபெறும் 151-வது பயிற்சிப் பிரிவின் நிறைவு அணிவகுப்பில் திரு ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அணிவகுப்பு மரியாதையை ஏற்கவுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2343321®=3&lang=1
***
SS/PLM/RJ