இடுகை இடப்பட்ட நாள்:
29 NOV 2026 3:26PM by PIB Chennai
பெண்களுக்கு உரிய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற போராட்டம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது எனவும் இந்த முயற்சியில் தானும் பல ஆண்டுகளாகப் பங்கேற்று வருவதாகவும் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.
பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்ற உறுதிப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும், நாட்டின் நலனே முதன்மையானது என்றும் அவர் கூறினார். நாட்டின் நலனை விட சில கட்சிகளின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டால், அதன் பாதிப்பை பெண்களும் நாடும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.
தற்போதைய சூழலில் மகளிர் இடஒதுக்கீடுச் சட்டத்திருத்தம் மிகவும் அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தினார். நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ளவர்களின் கனவுகளை நனவாக்கவும், நாட்டின் எதிர்காலத்தை மேம்படுத்தவும் இதனை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி, சமூக ஊடக எக்ஸ் தளத்தில் காணொலிப் பதிவை வெளியிட்டு அதில் தமது கருத்துகளைத் தெரிவித்தார்.
****
(Release ID: 2343450)
SS/PLM/RJ