இடுகை இடப்பட்ட நாள்:
28 NOV 2026 7:49PM by PIB Chennai
எழிமலையில் உள்ள இந்திய கடற்படை அகாடமி, 2026 நவம்பர் 28 அன்று, 2026-ன் இலையுதிர் பருவத்தில் பயிற்சியை நிறைவு செய்த வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியை நடத்தியது. இதில் 69 பெண் பயிற்சியாளர்கள் உட்பட மொத்தம் 427 பயிற்சியாளர்கள், தங்களுக்கு அளிக்கப்பட்ட கடுமையான அடிப்படை ராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர். இந்த அணிவகுப்பில் வங்கதேசம், கென்யா, மலாவி, மாலத்தீவு, மியான்மர், ஓமன், சீஷெல்ஸ், தான்சானியா, திமோர் லெஸ்தே ஆகிய ஒன்பது நட்பு நாடுகளைச் சேர்ந்த 18 பயிற்சியாளர்களும் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியல் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். கேரள ஆளுநர் திரு ஓம் பிரகாஷ் மாத்தூர், கேரள அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் திரு ரோஜி எம். ஜான், கடற்படைத் தளபதி அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன், தெற்கு கடற்படைத் தலைமை அதிகாரி வைஸ் அட்மிரல் சமீர் சக்சேனா, இந்தியக் கடற்படையின் மூத்த அதிகாரிகள், சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். பயிற்சியின் போது சிறந்து விளங்கிய பயிற்சியாளர்களுக்கு, குடியரசுத்தலைவர், பதக்கங்களையும் கோப்பைகளையும் வழங்கி கௌரவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2343193®=3&lang=1
****
SK/RB/RJ