சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
28 NOV 2026 7:05PM by PIB Chennai
தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில், போதைப்பொருள் இல்லாத இந்தியா தொடர்பாக, 3 நாட்கள் 40 கிலோ மீட்டர் தூர நடைப்பயணம் நடைபெற்றது. நவம்பர் 25 முதல் 27 வரை நடைபெற்ற இந்தப் பயணம், ஜூப்ளி ஹில்ஸில் நிறைவடைந்தது.
இதில் நிறைவு விழாவில் இன்று (28.11.2026) மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி பங்கேற்றார். இளைஞர்கள், மாணவர்கள், மக்கள் பிரதிநிதிகள், விளையாட்டு வீரர்கள், திரையுலகினர், ஆன்மிகத் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் பங்கேற்றனர். பத்ம விபூஷண் விருது பெற்ற குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், டாக்டர் கே. சிரஞ்சீவி, டாக்டர் டி. நாகேஸ்வர ரெட்டி ஆகியோரும் நிறைவு விழாவில் பங்கேற்றனர்.
பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆகஸ்ட் மாதம் தொடங்கிய 100 வார கால ‘வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான போதைப்பொருள் இல்லாத இளைஞர்கள் இயக்கத்தின்’ ஒரு பகுதியாக இந்த நடைப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.
போதைப்பொருள் பழக்கம் இளைஞர்களின் எதிர்காலத்தையும் கனவுகளையும் சீரழிக்கும் ஆபத்தான பிரச்சினை என்று மத்திய அமைச்சர் திரு கிஷன் ரெட்டி தெரிவித்தார். இளைஞர்கள் போதைப்பொருட்களைத் தவிர்த்து, ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்தியாவை 2029-க்குள் போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்ற அரசு உறுதிபூண்டுள்ளதாக திரு கிஷன் ரெட்டி தெரிவித்தார். போதைப் பழக்கத்திலிருந்து விடுபட உதவி தேவைப்படுவோர் 24 மணி நேர இலவச உதவி எண் 14446-ஐத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2343157®=48&lang=1&_gl=1
****
SK/PLM/RJ