இடுகை இடப்பட்ட நாள்:
28 NOV 2026 2:15PM by PIB Chennai
நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவைகள் ஆகியவற்றில் மகளிருக்கு அதிக அரசியல் பிரதிநிதித்துவம் வழங்குவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் காணொலிப் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் ஏராளமான பெண்கள் கடிதங்கள் மூலமாகவும், நேரடிச் சந்திப்புகள் மூலமாகவும் தங்களது விருப்பத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு அரசியலில் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நீண்டகாலமாக இருந்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மகளிர் சக்தி மீது கொண்டுள்ள நம்பிக்கையும், நாடு முழுவதும் பெண்களிடமிருந்து கிடைக்கும் ஆதரவும் இந்த முயற்சிக்கு வலுசேர்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரசின் உறுதிப்பாடு வலுவாக இருப்பதாகவும், அதற்கு நாடு தழுவிய அளவில் மகளிர் சக்தியின் ஆதரவு பக்கபலமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
வாக்குறுதியை நிறைவேற்றுவதில் இந்த அரசு உறுதியாக இருப்பதாக அந்த வீடியோ பதிவில் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2342997®=3
****
SK/PLM/RJ