பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஃபிஜி நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளுக்கான இந்தியாவின் முதலாவது சர்வதேச பயிற்சித் திட்டத்தின் முதல் கட்டம் நிறைவு

இடுகை இடப்பட்ட நாள்: 28 NOV 2026 2:17PM by PIB Chennai

ஃபிஜி நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்காக இந்தியாவின் பாதுகாப்புத் தலைமையகப் பயிற்சி நிறுவனம் நடத்திய முதலாவது சர்வதேசப் பயிற்சித் திட்டத்தின் முதல் கட்டம் நிறைவடைந்துள்ளது.

'உலகளாவிய தலைமைத்துவப் பயிற்சித் திட்டம்' என்ற பெயரில் இந்தப் பயிற்சி நடைபெற்றது. சுமார் இரண்டு வாரங்கள் நடைபெற்ற இதன் முதல் கட்டம், 2026 நவம்பர் 27 அன்று ஃபிஜியின் சுவா நகருக்கு அருகிலுள்ள லாமியில் நிறைவடைந்தது.

நல்லாட்சி, பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதல், நிர்வாகத்தில் நேர்மை, திறன் மேம்பாடு, மனிதவள மேலாண்மை, நிர்வாகச் சட்டம் ஆகியவை குறித்து இதில் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், மக்கள் நலனை மையமாகக் கொண்ட நிர்வாகம், பாதுகாப்புத் துறையின் தணிக்கை முறையை நவீனப்படுத்துதல், செயற்கை நுண்ணறிவு மூலம் டிஜிட்டல் மாற்றம், சிறந்த தலைமைத்துவம், உத்திசார் தகவல் தொடர்பு, தலைவர்களுக்கான நுண்ணறிவு ஆகிவை தொடர்பாகவும்  பயிற்சி அளிக்கப்பட்டது.

நிறைவு விழாவில் ஃபிஜி பாதுகாப்பு அமைச்சகத்தின் பொறுப்புச் செயலாளர் திரு எரோனி ரோகிசி, பிஜியில் உள்ள இந்தியத் தூதரகத்தின் செயலாளர் திரு ரஞ்சீத் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

பயிற்சியின் தரத்தைப் பாராட்டிய திரு எரோனி ரோகிசி, நிர்வாகத் திறன், வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, நிதி மேலாண்மை, தலைமைத்துவம், இணையப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் பங்கேற்பாளர்களின் திறனும் பார்வையும் மேம்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இரண்டாம் கட்டப் பயிற்சி 2027-ம் ஆண்டின் முதல் காலாண்டில் புதுதில்லியில் இரண்டு வாரங்கள் நடைபெற உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2342998&reg=3&lang=1

****

SK/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2343060) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी