தேசிய நிதி அறிவிக்கை ஆணையம்
azadi ka amrit mahotsav

தணிக்கைத் தரத்தை உயர்த்துவதற்கான பயிலரங்கு: சென்னையில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 28 NOV 2026 1:07PM by PIB Chennai

நாட்டில் தணிக்கை முறையை மேம்படுத்தவும், தணிக்கையின் தரத்தை உயர்த்தவும் சென்னையில் சிறப்புப் பயிலரங்கு நடைபெற்றது.

தேசிய நிதி அறிக்கையிடல் ஆணையம், சென்னையைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர்கள் சங்கத்துடன் இணைந்து இந்த ஒருநாள் நிகழ்ச்சியை நடத்தியது. கடந்த நவம்பர் 21-ம் தேதி நடைபெற்ற இந்தப் பயிலரங்கில் 200-க்கும் மேற்பட்ட தணிக்கைத் துறை வல்லுநர்கள் பங்கேற்றனர். தணிக்கைத் தரத்தை மேம்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

இந்தப் பயிலரங்கை தேசிய நிதி அறிக்கையிடல் ஆணையத்தின் தலைவர் திரு நிதின் குப்தா தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் கணக்குத் தணிக்கைத் துறையினருக்கு முக்கியப் பங்கு இருப்பதாகக் குறிப்பிட்டார்.

பொதுமக்களின் நலனைப் பாதுகாப்பதிலும், நிதி அறிக்கைகள் மீதான நம்பிக்கையை உருவாக்குவதிலும் இத்துறை முக்கியப் பங்காற்றுவதாக அவர் தெரிவித்தார்.

தொழில்நுட்பம் வேகமாக மாறி வரும் சூழலில், தணிக்கை நிறுவனங்கள் தங்களின் தணிக்கைத் தரத்தில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்று திரு நிதின் குப்தா வலியுறுத்தினார். பெரிய நிறுவனங்கள், சிக்கலான அமைப்புகளைக் கொண்ட நிறுவனங்கள் ஆகியவற்றின் கணக்குகளைத் தணிக்கை செய்வதற்கான திறனையும் தொடர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய நிதி அறிக்கையிடல் ஆணையத்தின் முழுநேர உறுப்பினர் திருமதி ஸ்மிதா ஜிங்ரனும் நிகழ்ச்சியில் உரையாற்றினார். ஆணையம் ஆண்டுதோறும் மேற்கொள்ளும் ஆய்வுகள், கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆகியவை தணிக்கையின் தரத்தை உயர்த்துவதில் முக்கியப் பங்கு வகிப்பதாக அவர் விளக்கினார்.

மேலும், திரு. நிதின் குப்தா, திருமதி. ஸ்மிதா ஜிங்ரன் ஆகியோர் பங்கேற்பாளர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடினர். அப்போது தணிக்கைத் துறையினரின் கேள்விகளுக்குப் பதிலளித்ததுடன், அவர்களின் கருத்துகளையும் கேட்டறிந்தனர். நாடு முழுவதும் தணிக்கைத் தரத்தையும், தொழில்முறைத் திறனையும் மேம்படுத்தும் நோக்கில் இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருவதாக தேசிய நிதி அறிக்கையிடல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2342983&reg=3&lang=1

****

SK/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2343056) வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी