இடுகை இடப்பட்ட நாள்:
28 NOV 2026 1:11PM by PIB Chennai
இந்திய பெருநிறுவன விவகாரங்கள் நிறுவனம் (IICA), பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மறுவாழ்வு இயக்குநரகத்துடன் (DGR) இணைந்து, முப்படை அதிகாரிகளுக்கான பெருநிறுவன நிர்வாகச் சான்றிதழ் பயிற்சியின் 6-வது தொகுதியை நிறைவு செய்துள்ளது.
மனேசரில் உள்ள ஐஐசிஏ வளாகத்தில் நவம்பர் 16 முதல் 27-ம் தேதி வரை நடைபெற்ற இரண்டு வாரப் பயிற்சியில் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றைச் சேர்ந்த 30 மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். இதுவரை 2024 ஆகஸ்ட் முதல் மொத்தம் 150 அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்களின் இயக்குநர் குழுக்களில் இயக்குநர்களாகப் பணியாற்றுவதற்குத் தேவையான பயிற்சி இதில் வழங்கப்பட்டது. நிறுவனச் சட்டங்கள், நிதிநிலை அறிக்கைகள், தணிக்கை, மேலாண்மை, சமூகப் பொறுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
நிறைவு விழாவில் பேசிய ஐஐசிஏ தலைமை இயக்குநர் திரு ஞானேஷ்வர் குமார் சிங், நிறுவனங்களின் சிறந்த நிர்வாகத்துக்கு இயக்குநர்கள் சரியாக முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தேசிய நிதி அறிக்கை ஆணையத்தின் உறுப்பினர் திரு பி. டேனியல், இயக்குநர்களுக்கு நேர்மை, நம்பகத்தன்மை அவசியம் என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2342987®=3
****
SK/PLM/RJ