இடுகை இடப்பட்ட நாள்:
27 NOV 2026 5:43PM by PIB Chennai
மருத்துவத் தாவரங்களை வணிகப் பயன்பாட்டுக்காகப் பயன்படுத்திய நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட ரூ.13.76 கோடி நிதியை, பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாக்கும் நோக்கில் 28 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களுக்கு தேசிய பல்லுயிர் ஆணையம் வழங்கியுள்ளது.
ஆயுஷ் மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள், மருத்துவத் தாவரங்கள் உள்ளிட்ட தாவர வளங்களை வணிக ரீதியாகப் பயன்படுத்தியதற்காக வழங்கிய நிதி இதுவாகும். பயன் பகிர்வு நடைமுறையின் கீழ் இந்தத் தொகை மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மொத்தம் 234 தாவர இனங்கள் தொடர்பான மூன்று விண்ணப்பங்களின் அடிப்படையில் இந்த நிதி கிடைத்துள்ளது. குக்குலு, அஸ்வகந்தா, கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, சர்ப்பகந்தா, நிலவேம்பு, மிளகு, நெல்லிக்காய், கோக்ஷுரா, சால்பர்ணி ஆகிய 10 தாவர இனங்கள் மூலம் ரூ.6.45 கோடி நிதி கிடைத்துள்ளது.
மாநிலங்களில் மகாராஷ்டிராவுக்கு அதிகபட்சமாக ரூ.1.75 கோடியும், அருணாச்சலப் பிரதேசத்துக்கு ரூ.93.74 லட்சமும், ஆந்திரப் பிரதேசத்துக்கு ரூ.88.07 லட்சமும் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு ரூ.63.03 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிதி மூலம் பல்லுயிர் மேலாண்மைக் குழுக்களை வலுப்படுத்துதல், பல்லுயிர் பதிவேடுகளைப் புதுப்பித்தல், பாரம்பரிய அறிவைப் பதிவு செய்தல், ஆராய்ச்சி, பயிற்சி ஆகிய பணிகளை மேற்கொள்ள முடியும்.
தேசிய பல்லுயிர் ஆணையம் இதுவரை பயன் பகிர்வு நடைமுறையின் மூலம் ரூ.278 கோடி வசூலித்துள்ளது. இதில் சுமார் ரூ.218.86 கோடி பல்லுயிர் பாதுகாப்பு, சமூக நலத் திட்டங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. மருத்துவத் தாவரங்களைப் பொறுப்புடன் சேகரித்தல், மீண்டும் பயிரிடுதல், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றை ஊக்குவிப்பதே இந்த நிதி ஒதுக்கீட்டின் முக்கிய நோக்கமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2342671®=3&lang=1
(Release ID : 2342671)
****
SK/PLM/SH