சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

போதைப்பொருள் புழக்கத்தில் இருந்து மீண்டு கண்ணியமான வாழ்க்கைக்கு திரும்பிய நபரின் பயணம்

இடுகை இடப்பட்ட நாள்: 27 NOV 2026 4:36PM by PIB Chennai

கர்நாடக மாநிலம், பகல்கோட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 46 வயதான இவர், மதுப்  பழக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். எனினும், மதுப் பழக்கத்தில் இருந்து விடுபட்டு கண்ணியமான வாழ்க்கையை கட்டமைக்கவும், வேலைவாய்ப்பை பெறவும், தனது குடும்பத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இந்நிலையில், மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் போதைப்பொருள் தேவைக் குறைப்புக்கான தேசிய செயல் திட்டத்தின் உதவியுடன் வித்யாகிரியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை, ஆலோசனைகளை பெற்றார். தொடர் சிகிச்சை மூலம் போதைப் பழக்கத்தில் இருந்து அவர் மீண்டார். இதைத்தொடர்ந்து, மருத்துவமனை ஒன்றில் ஆய்வகத் தொழில்நுட்ப பணியாளராக பணிக்கு சேர்ந்தார். இதன்மூலம் அவருக்கு மாதம் 30 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இந்த வாய்ப்பு, ராஜாவுக்கு நிலையான வருமானத்தை ஏற்படுத்திக் கொடுத்ததுடன், கண்ணியமான வாழ்க்கை வாழ்வதற்கு உதவிகரமாக அமைந்து தகுறிப்பிடத்தக்கது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2342582&reg=3&lang=1

****

SK/LN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2342865) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी