தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
27 NOV 2026 4:51PM by PIB Chennai
வங்கி, நிதிச் சேவைகள், காப்பீட்டுத் துறை, அரசு சாரா நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்குச் சேவை, பரிவர்த்தனை தொடர்பான குரல் அழைப்புகளை மட்டும் மேற்கொள்வதற்காகத் தொலைத்தொடர்புத் துறையால் ஒதுக்கப்பட்ட 1601 எண் வரிசைப் பயன்பாட்டைக் கூடுதல் துறைகளுக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) நீட்டித்துள்ளது.
இரண்டாம் கட்ட நடைமுறைப்படுத்தலின் கீழ், கடந்த 3 நிதியாண்டுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் ரூ.500 கோடி அல்லது அதற்கு மேல் ஆண்டு வருவாய் கொண்ட சில்லறை விற்பனை நிறுவனங்கள், மின்னணு வணிகம், மருத்துவமனைகள், பரிசோதனைக் கூடங்கள், தொலைத்தொடர்பு, இணைய சேவை நிறுவனங்கள், வாகன விற்பனை, பழுதுபார்ப்பு, பயண முகமைகள், விமான நிறுவனங்கள், உணவு விநியோக நிறுவனங்கள், வாடகை வாகனச் செயலிகள், கடன் சேவை நிறுவனங்கள் ஆகியவை இந்த எண் வரிசையைப் பெறத் தகுதியுடையவை. 10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட சந்தாதாரர்களைக் கொண்ட டிடிஹெச், கேபிள் டிவி சேவை நிறுவனங்களும் இதில் அடங்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2342597®=3&lang=1
****
SK/PD/SH