தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொலைத்தொடர்பு இணைப்பு (திருத்த) விதிமுறைகள் 2026-ஐ டிராய் வெளியிட்டது

இடுகை இடப்பட்ட நாள்: 27 NOV 2026 4:52PM by PIB Chennai

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தொலைத்தொடர்பு இணைப்பு (குறிப்பு இணைப்புச் சலுகை) (திருத்த) விதிமுறைகள், 2026-ஐ இன்று வெளியிட்டது. 2027 ஜனவரி 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் இந்தப் புதிய விதிமுறைகள், குறிப்பு இணைப்புச் சலுகை கட்டமைப்பை நவீனப்படுத்துவதுடன், தற்போதைய உரிமம், அங்கீகார நடைமுறைகளுக்கு ஏற்ப அதனை ஒருங்கிணைக்கின்றன.

ஒரு தொலைத்தொடர்பு சேவை வட்டத்தில் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய், சந்தாதாரர் எண்ணிக்கை, குரல் அழைப்பு கையாளும் திறன், பயன்பாட்டு அளவு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் 30% அல்லது அதற்கு மேற்பட்ட பங்கைக் கொண்டுள்ள நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க சந்தை செல்வாக்கு பெற்றவையாகக் கருதப்படும். இத்தகைய நிறுவனங்கள் தங்களது குறிப்பு இணைப்புச் சலுகையை 30 நாட்களுக்குள் டிராய் ஒப்புதலுக்குச் சமர்ப்பித்து, ஒப்புதல் பெற்ற 15 நாட்களுக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும். விதிமீறல்களுக்குப் படிப்படியான அபராதம் விதிக்கும் நடைமுறையும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2342598&reg=3&lang=1

****

SK/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2342823) வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी