சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய கல்வி உதவித்தொகை மூலம் முனைவர் பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்த பெண்

இடுகை இடப்பட்ட நாள்: 27 NOV 2026 5:32PM by PIB Chennai

மேற்கு வங்க மாநிலம், கூச்பெஹார் பகுதியை சேர்ந்தவர் செல்வி ரியா தாஸ் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). உயர் கல்வியில் சாதிக்க விரும்பிய இவர், நிதிச்சுமை காரணமாக முனைவர் பட்டப் படிப்பை தொடர மிகவும் சிரமப்பட்டார். இந்நிலையில், ரியா தாஸ்-க்கு மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறையின் கீழ் இயங்கும் பட்டியலின மாணவர்களுக்கான தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தின் மூலம் நிதியுதவி கிடைத்தது. 2017ம் ஆண்டில் இருந்து ரூ.20 லட்சம் நிதி வழங்கப்பட்ட நிலையில், நிதிச்சுமையில் இருந்து மீண்டு முனைவர் பட்டப் படிப்பை அவர் வெற்றிகரமாக முடித்தார். தேசிய கல்வி உதவித்தொகையின் மூலம் தன்னுடைய உயர்கல்வி கனவு நனவானதாக, ரியா தாஸ் பெருமையுடன் தெரிவித்தார்.     

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2342650&reg=3&lang=1

****

SK/LN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2342809) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी