புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கல்வி, நிறுவன ரீதியிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

இடுகை இடப்பட்ட நாள்: 27 NOV 2026 2:52PM by PIB Chennai

மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம், அசோகா பல்கலைக்கழகம் இடையே புதுதில்லியில் 2026 நவம்பர் 27-ம் தேதி அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.  கல்வி, நிறுவன ரீதியிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையிலான இந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில், புள்ளியியல், திட்ட அமலாக்கத்துறை செயலாளர் திரு சௌரப் கார்க், அசோகா பல்கலைக்கழகத்தின் தலைவர் டாக்டர் பிராச்சி மிஸ்ரா, அசோகா பல்கலைக்கழகப் பதிவாளர், துறைசார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது பேராசிரியர்கள் பரிமாற்றம், களப் பயணங்கள், ஒருங்கிணைந்த ஆராய்ச்சி, கல்விசார் வளங்கள், வெளியீடுகளை பகிர்தல், கருத்தரங்குகள், மாநாடுகள், பயிலரங்குகள், குறுகிய காலக் கல்வித் திட்டம் போன்ற பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை நோக்கமாகக் கொண்டதாகும். புள்ளியியல் துறை, கல்வி நிறுவனங்கள் இடையே வலுவான இணைப்பை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைந்துள்ளது.      

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2342496&reg=3&lang=1

 

***

SS/LN/SH 


(வெளியீட்டு அடையாள எண்: 2342743) வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी