பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதம மந்திரி விருது பெற்ற முன்முயற்சிகளின் நிலைத்தன்மை மற்றும் மறுஉருவாக்கம் என்ற கருப்பொருளில் 42-வது தேசிய நல் ஆளுமை இணையக் கருத்தரங்கு நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 26 NOV 2026 4:08PM by PIB Chennai

நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் துறை சார்பில், பிரதம மந்திரி விருது பெற்ற முன்முயற்சிகளின் நிலைத்தன்மை மற்றும் மறுஉருவாக்கம்’ என்ற கருப்பொருளில் 42-வது தேசிய நல் ஆளுமை இணையக் கருத்தரங்கு இன்று நடைபெற்றது. பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியமைக்கான பிரதமர் விருது (2024) பெற்ற கோராபுட் மாவட்ட முன்முயற்சி குறித்து இக்கருத்தரங்கில் விளக்கமளிக்கப்பட்டது.

325-க்கும் மேற்பட்ட இடங்களிலிருந்து சுமார் 1,000 அதிகாரிகள் பங்கேற்ற இக்கருத்தரங்கிற்கு நிர்வாகச் சீர்திருத்தம், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை கூடுதல் செயலாளர் திரு. புனீத் யாதவ் தலைமை தாங்கினார். விருது பெற்ற முன்முயற்சி குறித்து கஞ்சம் மாவட்ட ஆட்சியர் திரு. கீர்த்தி வாசன் வி., அதன் நிலைத்தன்மை குறித்து கோராபுட் மாவட்ட ஆட்சியர் திரு. மனோஜ் சத்யவான் மகாஜன் மற்றும் விரிவாக்கம் குறித்து ஒடிசாவின் கஞ்சம் தலைமை மேம்பாட்டு அதிகாரி திரு. சமீர் குமார் ஜெனா ஆகியோர் உரையாற்றினர்.

ஏப்ரல் 2022 முதல் இதுவரை 41 இணையக் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு, சிறந்த நிர்வாக நடைமுறைகள் நாடு முழுவதும் பரவலாக்கப்பட்டு வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341931&reg=3&lang=1

***

SK/NB/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2342536) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी