அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

ஜம்மு சிஎஎஸ்ஐஆர் ஐஐஐஎம் நிறுவனத்துக்கு, உயர்கல்வி, திறன் மேம்பாட்டில் சிறந்து விளங்கியதற்கான டிஐடிஏசி விருது

இடுகை இடப்பட்ட நாள்: 26 NOV 2026 5:03PM by PIB Chennai

ஜம்முவில் உள்ள அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சிக் கவுன்சிலின் (CSIR) ஒருங்கிணைந்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான சிஎஎஸ்ஐஆர் ஐஐஐஎம் 2026-ம் ஆண்டுக்கான டிஐடிஏசி இந்தியா விருதைப் பெற்றுள்ளது. உயர்கல்வி, திறன் மேம்பாட்டில் சிறந்து விளங்கும் முன்னோடி நிறுவனத்துக்கான விருது இதற்கு வழங்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் நவம்பர் 25 முதல் 27 வரை நடைபெறும் டிஐடிஏசி இந்தியா 2026 நிகழ்ச்சியில் 19 நாடுகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள், 500-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், சுமார் 1,000 கல்வி நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

சிஎஸ்ஐஆர்-ன் ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப வேலைவாய்ப்பை உருவாக்கும் பயிற்சிகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. நவீன கருவிகளைக் கையாளுதல், நேரடிப் பயிற்சி, தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகளை அறிதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இந்நிறுவனத்தின் திறன் மேம்பாட்டுப் பணிகளை விரிவுபடுத்துவதில் டாக்டர் நசீர் உல் ரஷீத் முக்கியப் பங்காற்றியுள்ளார். இயக்குநர் டாக்டர் ஜபீர் அகமது தலைமையில், ஆராய்ச்சியைச் சமூகத் தேவைகளுடன் இணைக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் டாக்டர் என். கலைச்செல்வி, இந்தச் சாதனைக்காக இயக்குநர் டாக்டர் ஜபீர் அகமது உள்ளிட்ட குழுவினரைப் பாராட்டியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2342012&reg=3&lang=1      

***

SK/PLM/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2342522) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , हिन्दी