பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையை மாநில மொழிகளில் வாசித்து அரசியலமைப்பு தினத்தைக் கொண்டாடிய ஊராட்சிகள்

இடுகை இடப்பட்ட நாள்: 26 NOV 2026 6:46PM by PIB Chennai

அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கியத்துவத்தை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில், நாடு முழுவதும் அரசியலமைப்பு தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சார்பில் அமைச்சக அளவிலும், கிராம ஊராட்சிகள் அளவிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு. டாக்டர் வினீத் ஜோஷி தலைமையில், அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், பணியாளர்கள் ஆகியோர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையை ஒன்றாக வாசித்தனர்.

இதேபோல், நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள், கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவை தங்களது மாநிலங்களின் மொழிகளில் அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையைப் பெருமளவில் வாசித்தன. இதில் பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவதற்காக, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பஞ்சாயத்து ராஜ்/ ஊரக வளர்ச்சித் துறைகளுடன் மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் இணைந்து செயல்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் பரவலான பங்கேற்பு உறுதி செய்யப்பட்டது.

 

இந்தக் கூட்டு முயற்சிகள், நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய அரசியலமைப்பின் அடிப்படை விழுமியங்களை மீண்டும் உறுதிப்படுத்தின. குறிப்பாக, கிராமப்புற மக்களிடையே அரசியலமைப்பின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வை வலுப்படுத்த உதவின.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2342156&reg=3&lang=1

(Release ID: 2342156)

****

SK/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2342309) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , English , Urdu