சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மேற்கு வங்கத்தில் ரூ.75,000 கோடியில் புதிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் : மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 26 NOV 2026 6:10PM by PIB Chennai

மேற்கு வங்கத்தில் ரூ.75,000 கோடி மதிப்பில் புதிய சாலை உள்கட்டமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம், கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டம், கொலாகட்டில் இன்று (26.11.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.8,700 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான 22 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை அவர் தொடங்கி வைத்ததுடன், புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய திரு நிதின் கட்கரி, சாலை வசதிகள் தொழில் வளர்ச்சி, வர்த்தகம், விவசாயம், சுற்றுலா ஆகியவற்றை மேம்படுத்துவதுடன், முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் அண்மையில் ரூ.40,000 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், ரூ.35,000 கோடி மதிப்பிலான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டங்கள் அண்டை மாநிலங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், தொழில் மையங்கள் ஆகியவற்றுடனான போக்குவரத்தை மேம்படுத்தி, வர்த்தகம், சுற்றுலா, பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்று திரு நிதின் கட்கரி தெரிவித்தார். திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த நிலம் கையகப்படுத்துதல், தேவையான அனுமதிகளை வழங்குதல் ஆகியவற்றில் மாநில அரசு தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் திரு நிதின் கட்கரி கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2342122&reg=3&lang=1

(Release ID : 2342122)

****

SK/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2342301) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali