கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஸ்ரீ குரு தேக் பகதூர் ஜியின் 350-வது ஷஹீதி திவாஸ் நிறைவு விழாவில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பங்கேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 26 NOV 2026 4:34PM by PIB Chennai

புதுடெல்லி துவாரகாவில் உள்ள கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தில், ஸ்ரீ குரு தேக் பகதூர் ஜியின் 350-வது ஷஹீதி திவாஸ் ஓராண்டு நினைவு நிகழ்ச்சிகளின் நிறைவு விழா நடைபெற்றது. மனசாட்சி சுதந்திரம், மத சுதந்திரம் மற்றும் மனிதகுல நலனுக்காக அவர் செய்த உன்னத தியாகத்தை இந்நிகழ்வு போற்றியது. மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

நவம்பர் 24, 2025 முதல் நவம்பர் 24, 2026 வரை நடைபெற்ற இப்பிரச்சாரத்தில், நினைவு நாணயம் மற்றும் தபால் தலை வெளியிடப்பட்டது; நிறைவு விழாவில் ஷபத் கீர்த்தன், கண்காட்சி மற்றும் குறும்படம் இடம்பெற்றன. சுமார் 68,000 மாணவர்கள் பங்கேற்ற 220 பள்ளிகளில் கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மைய பயிலரங்குகள் நடத்தப்பட்டன.

பிறரின் நம்பிக்கை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாக்கத் தம் இன்னுயிரை ஈந்த குரு தேக் பகதூர் ஜியின் போதனைகள், மனித மாண்பையும் சுயநலமற்ற சேவையையும் வலியுறுத்துவதாகத் திரு. ஷெகாவத் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் குறிப்பிட்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341976&reg=3&lang=1&_gl=1

****

SK/NB/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2342259) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी