மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மீன்வளம், கால்நடை வளர்ப்பு, பால்வள அமைச்சகம் சார்பில் கொண்டாடப்பட்ட தேசிய பால் தின விழா

இடுகை இடப்பட்ட நாள்: 26 NOV 2026 4:27PM by PIB Chennai

மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு, பால்வள அமைச்சகத்தின் கால்நடை வளர்ப்பு, பால்வளத்துறை சார்பில் பீகார் மாநிலம், பாட்னாவில்  தேசிய பால் தினம் 2026 நவம்பர் 26-ம் தேதி அன்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், பீகார் மாநில முதலமைச்சர் திரு சாம்ராட் சவுத்ரி, மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு, பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய பீகார் முதலமைச்சர் திரு சாம்ராட் சவுத்ரி, கிராமப்புற வளர்ச்சிக்கும், மாநிலப் பொருளாதாரத்துக்கும் கால்நடை வளர்ப்போர் ஆற்றிய பங்களிப்பை எடுத்துரைத்தார். பீகாரில் தினமும் 48 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்வதாகவும், இதை ஒரு கோடி லிட்டராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இவ்விழாவில், நாடு முழுவதிலும் இருந்து கால்நடை விவசாயிகள், பால் கூட்டுறவு சங்கத்தினர் உள்ளிட்டோர் காணொலி வாயிலாக பங்கேற்றனர். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341975&reg=3&lang=1&_gl=

****

SK/LN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2342249) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी