சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சக அரங்கின் விற்பனை ரூ.1.81 கோடியைத் தாண்டியது

இடுகை இடப்பட்ட நாள்: 26 NOV 2026 5:35PM by PIB Chennai

45-வது இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2026, புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் அரங்கில், நவம்பர் 25-ம் தேதி நிலவரப்படி, மொத்த விற்பனை ரூ.1.81 கோடியைத் தாண்டியுள்ளது. இது உள்நாட்டுத் தயாரிப்புகள், பாரம்பரியக் கைவினைப் பொருட்கள் ஆகியவை மீதான மக்களின் ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது.

இந்த அரங்கில் 19 மாநிலங்களைச் சேர்ந்த 130-க்கும் மேற்பட்ட கைவினைக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். தேசிய பட்டியலினத்தவர் நிதி மேம்பாட்டுக் கழகம், தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நிதி மேம்பாட்டுக் கழகம், தேசிய தூய்மைப் பணியாளர்கள் நிதி மேம்பாட்டுக் கழகம் ஆகிய மூன்று அமைப்புகள் மூலம் இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய கைத்தறி ஆடைகள், கைவினைப் பொருட்கள், நகைகள், காலணிகள், துணிகள் உள்ளிட்டவை இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.

இதுகுறித்து அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின்  கொள்கைக்கு ஏற்ப, கைவினைக் கலைஞர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் நிலையான வேலைவாய்ப்புக்கும் இந்த முயற்சி உதவுவதாகத் தெரிவித்தார்.

நவம்பர் 13-ஆம் தேதி தொடங்கிய இந்தக் கண்காட்சி நவம்பர் 27-ஆம் தேதி நிறைவடைகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2342065&reg=3&lang=1&_gl=1

(Release ID : 2342065)

****

SK/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2342247) வருகையாளர் எண்ணிக்கை : 3
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , English , Urdu