இடுகை இடப்பட்ட நாள்:
26 NOV 2026 1:44PM by PIB Chennai
மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் டிஜிட்டல் இந்தியா பாஷினி பிரிவு, சமூக நீதி அதிகாரமளித்தல் துறை இடையே, அரசின் திட்டங்கள், சேவைகளை பன்மொழிகளில் பெறுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு பி எல் வர்மா, டிஜிட்டல் இந்தியா பாஷினி பிரிவின் தலைமைச் செயல் அதிகாரி திரு அமிதாப் நாக் ஆகியோர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அரசின் திட்டங்கள், சேவைகளை, பொதுமக்களும், பயனாளிகளும் தங்களது மொழிகளில் எளிதில் புரிந்துகொண்டு பயன்பெறும் வகையில், 22-க்கும் மேற்பட்ட மொழிகளில் தகவல் பெற வழிவகை செய்வதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும். செயற்கை நுண்ணறிவைக் கொண்டு மேம்படுத்தப்படும் மொழிபெயர்ப்பு, உரையின் மூலம் பொதுமக்கள் அரசின் சேவைகளை எளிதில் அறிந்துகொள்ள டிஜிட்டல் இந்தியா பாஷினி பிரிவு நடவடிக்கை எடுக்க உள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய டிஜிட்டல் இந்தியா பாஷினி பிரிவின் தலைமைச் செயல் அதிகாரி திரு அமிதாப் நாக், அரசின் நலத்திட்டங்கள், சேவைகளை அணுகுவதற்கு மொழி ஒருபோதும் தடையாக இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்வதே தங்களது நோக்கம் என குறிப்பிட்டார். பழங்குடியின மக்களுக்கும் இச்சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். பழங்குடியின மக்களின் மொழி, குறைந்தளவு பயன்பாட்டில் உள்ள மொழிகளை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341811®=3&lang=1&_gl=1
***
SS/LN/SH