இடுகை இடப்பட்ட நாள்:
25 NOV 2026 6:19PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வையின்படி, விவசாயத் துறையின் மீள்திறனை வலுப்படுத்தவும், உரப் பாதுகாப்பை உறுதி செய்யவும், யூரியா உற்பத்தியில் தன்னிறைவை அடையவும் மத்திய அரசு ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. 'யூரியாவுக்கான தேசிய முதலீட்டுக் கொள்கை-2026'-ன் கீழ், ஏற்கனவே உள்ள ஆலை வளாகங்களில் 6 புதிய யூரியா ஆலைகளை அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சுமார் ரூ. 54,000 கோடி முதலீட்டில் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி, யூரியா உற்பத்தியில் தன்னிறைவு அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆறு ஆலைகளில் சென்னை மெட்ராஸ் உரத்தொழிற்சாலையும் அடங்கும். அதிக உற்பத்திச் செலவு, எரிசக்தி நுகர்வு, பாதுகாப்பு அபாயங்களைக் கொண்ட 60 ஆண்டுகளுக்கும் மேலான பொதுத்துறை நிறுவனத்தின் பழைய உற்பத்தி ஆலைக்குப் பதிலாக, ஆண்டுக்கு 12.7 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் கொண்ட புதிய உற்பத்தி ஆலையை அமைக்கும் திட்டமாக இது அமைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2341442®=3&lang=1
***
SK/BR/PS