மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

உள்நாட்டு செயற்கை நுண்ணறிவுத் திறனை வலுப்படுத்தும் வகையில் சாரியட்-1 அடிப்படை செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் அறிமுகம்

இடுகை இடப்பட்ட நாள்: 26 NOV 2026 11:23AM by PIB Chennai

இந்தியாவின் உள்நாட்டு செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய நடவடிக்கையாக, இந்திய செயற்கை நுண்ணறிவு இயக்கத்தின் கீழ் சாரியட் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட சாரியட்-1 அடிப்படை மாதிரிகளை மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகச் செயலாளர் திரு எஸ் கிருஷ்ணன் புதுதில்லி பாரத் மண்டபத்தில் இன்று அறிமுகம் செய்துவைத்தார்.

இந்திய செயற்கை நுண்ணறிவு இயக்கத்தின் கீழ் உள்நாட்டிலேயே செயற்கை நுண்ணறிவு சார்ந்த அடிப்படை மாதிரிகளை உருவாக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நான்கு குழுக்களில் சாரியட் நிறுவனமும் ஒன்றாகும். இந்தியாவிலேயே முழுமையாக உருவாக்கப்பட்ட சாரியட்-1 பெரிய மொழி மாதிரி, சாரியட்-1 உரையிலிருந்து - பேச்சு மாதிரி ஆகியவை பன்மொழிச் செயலாக்கம், பேச்சு உருவாக்கத்தை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் இந்திய எழுத்துக்களுக்கான பொதுவான எழுத்துமுறை, ஒரே நேரத்தில் மூன்று அளவிலான மாதிரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் தொழில்நுட்பம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

தமிழ், இந்தி, வங்காள மொழி உள்ளிட்ட 10 இந்திய மொழிகளுடன் ஆங்கிலத்திலும் இயல்பான பேச்சை உருவாக்கும் திறன் கொண்ட இத்தொழில்நுட்பம், 97%-க்கும் அதிகமான துல்லியத் தன்மையைக் கொண்டுள்ளது. இந்தியாவின் இளம் கண்டுபிடிப்பாளர்களின் திறனுக்கு சாரியட்-1 சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது என திரு எஸ் கிருஷ்ணன் பாராட்டினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341725&reg=3&lang=1

***

SS/PD/PS

 


(வெளியீட்டு அடையாள எண்: 2341817) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी