புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களுக்குப் பாதுகாப்பான தரவுப் பகிர்வை உறுதி செய்ய மத்திய புள்ளியியல் அமைச்சகம் ஒப்பந்தம்

இடுகை இடப்பட்ட நாள்: 25 NOV 2026 4:36PM by PIB Chennai

அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களுக்கு நம்பகமான தரவுப் பகிர்வைச் செயல்படுத்தும் வகையில், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் - நாஸ்காம் அமைப்பால் நிறுவப்பட்ட இந்திய தரவுப் பாதுகாப்பு கவுன்சில் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (2026 நவம்பர் 25) புதுதில்லியில் கையெழுத்தானது. மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகச் செயலாளர் டாக்டர் சௌரப் கார்க், இந்திய தரவுப் பாதுகாப்பு கவுன்சில் தலைமைச் செயல் அதிகாரி திரு விநாயக் கோட்சே, அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

2027-ம் ஆண்டில் டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், தரவுகளின் தரம், தனிநபர் தகவல்கள், புள்ளிவிவர ரகசியத்தன்மையைப் பாதுகாத்துத் தரவுகளைப் பகிர்ந்து கொள்வதற்கான நெறிமுறைகளை உருவாக்க இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகை செய்கிறது. முதற்கட்டமாக, தரவுப் பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பில் சர்வதேச நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டு நம்பகமான தரவு மேலாண்மை குறித்த கொள்கை அறிக்கையை இரு அமைப்புகளும் இணைந்து தயாரிக்க உள்ளன.

மேலும், தரவு ஆளுகையில் கூட்டு ஆராய்ச்சி, தனிநபர் தகவல்களைப் பாதுகாக்கும் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான தொழில்நுட்ப ஆதரவு, செயற்கை நுண்ணறிவின் பொறுப்பான பயன்பாடு, தொழில்துறை, கல்வி நிறுவனங்களுடன் இணைந்த முன்னோடித் திட்டங்கள் ஆகியவற்றை செயல்படுத்துவதன் மூலம் தேசிய புள்ளிவிவரக் கட்டமைப்பை இந்த ஒப்பந்தம் வலுப்படுத்தும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341271&reg=3&lang=1&_gl=1

****

SK/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2341548) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी