அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

வடகிழக்கு இந்தியாவை அடிப்படையாகக் கொண்ட குழி விரியன் பாம்புக்கடிக்கான முதலாவது பிரத்யேக விஷமுறிவு மருந்து

இடுகை இடப்பட்ட நாள்: 25 NOV 2026 3:53PM by PIB Chennai

வடகிழக்கு மாநிலங்களில் காணப்படும் இரண்டு குறிப்பிட்ட வகை குழி விரியன் பாம்புகளின் விஷத்திற்கு எதிராகச் செயல்படும் புதிய விஷமுறிவு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமாகப் பயன்படுத்தப்படும் விஷமுறிவு மருந்துகள் வடகிழக்கு இந்தியாவின் மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த பாம்புகளுக்கு எதிராகக் குறைந்த செயல்திறனையே கொண்டிருந்த நிலையில், இப்புதிய கண்டுபிடிப்பு அப்பகுதியில் பாம்புக்கடி சிகிச்சையை மேம்படுத்த உதவும்.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான குவஹாத்தி மேம்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் ஆஷிஷ் கே. முகர்ஜி தலைமையிலான ஆராய்ச்சிக் குழு, மிசோரம், மேகாலயா மாநிலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட போப் குழி விரியன், சிவப்பு வால் மூங்கில் குழி விரியன் பாம்புகளின் விஷத்திற்கு எதிராகச் செயல்படும் புதிய விஷமுறிவு மருந்தை உருவாக்கியுள்ளது. குவஹாத்தி மேம்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், புனே பிரீமியம் சீரம்ஸ் மற்றும் வேக்சின்ஸ் நிறுவனம், அமிர்தா ஆராய்ச்சி மையம், மிசோரம் பல்கலைக்கழகம், ஆரண்யக் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் இத்திட்டத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

ஆய்வக, மருத்துவப் பரிசோதனைகளில் இப்புதிய விஷமுறிவு மருந்து ரத்தம் உறைதல் பாதிப்புகள், திசு சேதங்களைக் கணிசமாகக் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இம்மருந்தை நோயாளிகளுக்கு செலுத்துவதற்கு முன்பு கூடுதல் மருத்துவ மற்றும் ஒழுங்குமுறை சோதனைகள் அவசியம் எனப் பேராசிரியர் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341204&reg=3&lang=1&_gl=1

****

SK/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2341547) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu