தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நொய்டா, காசியாபாத், கிரேட்டர் நொய்டா பகுதிகளில் நடத்தப்பட்ட தொலைத்தொடர்பு சேவை தரச் சோதனை முடிவுகளை டிராய் வெளியிட்டது

இடுகை இடப்பட்ட நாள்: 25 NOV 2026 3:31PM by PIB Chennai

நொய்டா, காசியாபாத், கிரேட்டர் நொய்டா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 2026 செப்டம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட தொலைத்தொடர்பு சேவைத் தரச் சோதனை முடிவுகளை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ளது. தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களின் குரல் அழைப்பு, தரவு சேவைகளின் நிகழ்நேரத் தரத்தை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டது.

டிராய் நியமித்த முகமை மூலம் 2026 செப்டம்பர் 1 முதல் 5 வரை நகர்ப்புற சாலைகளில் 813.4 கிலோமீட்டர் தூரத்திற்கும், 8 முக்கிய இடங்களிலும், 3.8 கிலோமீட்டர் தூர நடைபயணச் சோதனையாகவும் இக்கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சிக்னல் கவரேஜ் இடைவெளி, அழைப்பு துண்டிப்பு விகிதம், பதிவிறக்க, பதிவேற்ற வேகம் ஆகியவை 2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி அலைவரிசைகளில் ஆய்வு செய்யப்பட்டன.

இச்சோதனை முடிவுகள் உரிய நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுடன் பகிரப்பட்டுள்ளன. இதன் விரிவான அறிக்கை டிராய் இணையதளத்தில் (www.trai.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341184&reg=3&lang=1&_gl=1

****

SK/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2341542) வருகையாளர் எண்ணிக்கை : 3
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी