புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய கணக்குகளின் 2022-23-ம் ஆண்டுத் தொகுப்பிற்கான ‘பிராந்திய கணக்குகள் துணைக்குழு’ அறிக்கை வெளியீடு

இடுகை இடப்பட்ட நாள்: 25 NOV 2026 2:33PM by PIB Chennai

தேசியக் கணக்குகள் புள்ளிவிவரங்களின் அடிப்படை ஆண்டை 2011-12-லிருந்து 2022-23-ஆக மாற்றியமைக்கும் பணியை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. பேராசிரியர் பி.என். கோல்டர் தலைமையிலான தேசியக் கணக்குகள் புள்ளிவிவர ஆலோசனைக் குழுவின் கீழ் அமைக்கப்பட்ட ஐந்து துணைக்குழுக்களில் ஒன்றான ‘பிராந்திய கணக்குகள் துணைக்குழு’, அகமதாபாத் இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (ஐஐஎம்) ஓய்வுபெற்ற பேராசிரியர் ரவீந்திர எச். தோலாக்கியா தலைமையில் மாநில, மாவட்ட உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளைக் கணக்கிடுவதற்கான வழிமுறைகளை விரிவாக ஆய்வு செய்தது. இந்திய ரிசர்வ் வங்கி, நிதி ஆயோக், மத்திய அமைச்சகங்கள், தேசிய புள்ளியியல் அலுவலகம், மாநில, யூனியன் பிரதேச பொருளாதாரம், புள்ளியியல் இயக்குநரகங்களின் வல்லுநர்கள் இதில் பங்கேற்றனர்.

உற்பத்தி, வருமானம், செலவின முறைகளின் கீழ் மாநில, மாவட்ட உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளைக் கணக்கிடுவதற்கான பரிந்துரைகளை இவ்வறிக்கை வழங்குகிறது. நேரடி மதிப்பீட்டு முறைக்கு மாறுதல், நிலையான விகிதங்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்தல், மாநிலங்களிடையே சீரான கணக்கீட்டு முறையை உறுதி செய்தல் ஆகியவை இதில் முக்கிய அம்சங்களாகும். திருத்தப்பட்ட 2022-23-ம் அடிப்படை ஆண்டுத் தொகுப்பின் கீழ் மாநில, யூனியன் பிரதேச பொருளாதாரம், புள்ளியியல் இயக்குநரகங்களுக்கு முக்கிய ஆதார ஆவணமாகத் திகழும் இவ்வறிக்கை, அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341138&reg=3&lang=1&_gl=1

****

SK/SE/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2341520) வருகையாளர் எண்ணிக்கை : 3
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी