கனரகத் தொழில்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வாகன மற்றும் வாகன உதிரிபாகத் தொழிலுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தில் 2026–27 நிதியாண்டில் ₹4,385.28 கோடி ஊக்கத்தொகை விநியோகம்

இடுகை இடப்பட்ட நாள்: 25 NOV 2026 3:56PM by PIB Chennai

வாகன மற்றும் வாகன உதிரிபாகத் தொழிலுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் முன்னேற்றம் குறித்து மத்திய கனரகத் தொழில்கள் மற்றும் எஃகுத் துறை அமைச்சர் திரு. எச்.டி. குமாரசாமி, கூடுதல் செயலாளர் டாக்டர் ஹனீப் குரேஷியுடன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

மொத்தம் ₹25,938 கோடி நிதி ஒதுக்கீடு கொண்ட இத்திட்டத்தில், 2026–27 நிதியாண்டில் நவம்பர் 25 வரை ₹4,385.28 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து மொத்தமாக ₹6,771.64 கோடி விநியோகிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 30, 2026 நிலவரப்படி, நிர்ணயிக்கப்பட்ட ₹42,500 கோடி இலக்கைத் தாண்டி ₹52,806 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. மேலும், ₹82,993 கோடி கூடுதல் விற்பனையும், 77,755 வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சம் 50% உள்நாட்டு மதிப்புக் கூட்டல் (DVA) கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், 9 முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் (139 தயாரிப்புகள்) மற்றும் 10 உதிரிபாக நிறுவனங்களுக்கு (53 தயாரிப்புகள்) DVA சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341207&reg=3&lang=1&_gl=1

****

SK/NB/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2341517) வருகையாளர் எண்ணிக்கை : 17
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati