இடுகை இடப்பட்ட நாள்:
25 NOV 2026 3:28PM by PIB Chennai
இந்தியாவின் உயிரிப் பொருளாதாரம் 2030-ஆம் ஆண்டிற்குள் 300 பில்லியன் டாலர்களை எட்டும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற ‘CII உலகளாவிய மரபணுவியல் உச்சி மாநாடு 2026’ நிகழ்வில் உரையாற்றிய அவர், மரபணுவியல் மற்றும் உயிரித் தொழில்நுட்பத் துறையில் முதலீடுகளை அதிகரிக்கத் தொழில்துறையினர் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.
2014-ல் 50-60 ஆக இருந்த உயிரித் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இன்று 11,000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளன; உயிரிப் பொருளாதாரம் 10 பில்லியன் டாலரிலிருந்து 195 பில்லியன் டாலராக விரிவடைந்துள்ளது. பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் வேலைவாய்ப்பிற்கான BioE3 கொள்கை, ₹1 லட்சம் கோடி மதிப்பிலான ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்கத் திட்டம் மற்றும் உயிரி-உற்பத்தி மையங்கள் மூலம் ஆராய்ச்சிகளை வணிகமயமாக்க அரசு ஊக்குவித்து வருகிறது.
‘ஜீனோம் இந்தியா’ திட்டத்தின் கீழ் 80 மக்கள் குழுக்களைச் சேர்ந்த 10,000 பேரின் முழு மரபணு வரிசைப்படுத்தல் நிறைவடைந்துள்ளது. கோவிட்-19 டிஎன்ஏ தடுப்பூசி, HPV தடுப்பூசி, ஹீமோபிலியா ஆராய்ச்சி மற்றும் குறைந்த செலவிலான CAR-T செல் புற்றுநோய் சிகிச்சை ஆகியவை இந்தியாவின் அறிவியல் வலிமைக்குச் சான்றாகும். சுகாதாரம் மட்டுமின்றி வேளாண்மை மற்றும் கால்நடை மேம்பாட்டிலும் மரபணுவியல் முக்கியப் பங்கு வகிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341178®=3&lang=1&_gl=
****
SK/NB/SH