இடுகை இடப்பட்ட நாள்:
25 NOV 2026 6:26PM by PIB Chennai
2026-ம் ஆண்டிற்கான அரசியலமைப்பு தினம் (சம்விதான் திவாஸ்) நவம்பர் 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 1949 நவம்பர் 26 அன்று அரசியலமைப்பு நிர்ணய சபையால் இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் வகையில், பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் 2015 முதல் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி, நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் 'மைகவ்' (pledge.mygov.in/constitution-day-2026/) இணையதளம் மூலம் ஆங்கிலம் மற்றும் 22 அட்டவணை மொழிகளில் அரசியலமைப்பு முகவுரையை வாசிக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. பொதுமக்கள், அரசுத் துறைகள், கல்வி நிறுவனங்கள் இதில் பங்கேற்று சான்றிதழ் பெற்று சமூக வலைதளங்களில் பகிருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், இளைஞர்களை ஊக்குவிக்க நவம்பர் 18 முதல் 26 வரை மைகவ் மற்றும் மைபாரத் தளங்களில் விநாடி-வினா போட்டியும், நவம்பர் 24 முதல் 26 வரை 786 மாவட்டங்களில் 'வளர்ச்சியடைந்த இந்தியா இளைஞர் உரையாடலும்' நடத்தப்படுகின்றன. நாடு முழுவதும் கருத்தரங்குகள், கலைநிகழ்ச்சிகள், நடைப்பயணங்கள், மாரத்தான் மற்றும் பள்ளிகளில் சிறப்புக் கூட்டங்கள் மூலம் அடிப்படை அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இந்தத்தினம், நாட்டுமக்கள் குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் அரசியலமைப்பு மாண்புகளைப் போற்றி, ஜனநாயகக் கடமைகளை உறுதிப்படுத்த வாய்ப்பளிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2341449®=3&lang=1
****
TV/SS/SH