தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரூ. 1,141 கோடி ஒதுக்கீட்டில் அஞ்சலக செயல்பாடுகள் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 25 NOV 2026 3:41PM by PIB Chennai

16-வது நிதி ஆணைய காலகட்டத்திற்கு (2026-27 முதல் 2030-31 வரை) ரூ. 1,141 கோடி மதிப்பீட்டில் அஞ்சலக செயல்பாடுகள் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் அஞ்சலக உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துதல், சரக்குப் போக்குவரத்து, மின்னணு வணிக நடவடிக்கைகள், டிஜிட்டல் சேவைகளின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்தல் ஆகியவற்றை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள 1,49,655 அஞ்சலகங்கள் உட்பட 1.65 லட்சம் அஞ்சலகங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய அஞ்சல் கட்டமைப்புகளில் ஒன்றாக இந்திய அஞ்சல் துறை திகழ்கிறது. அஞ்சல், பார்சல் விநியோகம் மட்டுமின்றி, அஞ்சலக சேமிப்பு வங்கி, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, அஞ்சல் ஆயுள் காப்பீடு, ஆதார் பதிவு, அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்கள், அஞ்சல் நிலைய ஏற்றுமதி மையங்கள் மூலம் கிராமப்புற கைவினைக்கலைஞர்களுக்கான ஆதரவு ஆகிய பொதுச் சேவைகளையும் அஞ்சலகங்கள் வழங்குகின்றன. டிஜிட்டல் இந்தியா, தற்சார்பு இந்தியா, வளர்ச்சியடைந்த இந்தியா ஆகிய இலக்குகளுக்கு ஏற்ப இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும் இத்திட்டம் 6 துணைத் திட்டங்களை உள்ளடக்கியது. இதில் கிராமப்புற வணிகம், அஞ்சல் கட்டமைப்பு அணுகலுக்கு ரூ. 120 கோடியும், நவீன தொழில்நுட்பம், 24 மணி நேர ஸ்மார்ட் அஞ்சல் பெட்டிகள் மூலம் அஞ்சல் கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 575 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. பார்சல் மையங்கள், பேக்கேஜிங் அலகுகள் விரிவாக்கத்திற்கு ரூ. 278 கோடியும், சர்வதேச அஞ்சல் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 8 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. சந்தைப்படுத்துதல் மற்றும் சேவைத் தரத்தை உயர்த்த ரூ. 100 கோடியும், தபால்தலை சேகரிப்பு செயல்பாடுகளை ஊக்குவிக்க ரூ. 60 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341194&reg=3&lang=1&_gl=1

***

TV/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2341427) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Malayalam