இடுகை இடப்பட்ட நாள்:
23 NOV 2026 8:38PM by PIB Chennai
கொல்கத்தாவைச் சேர்ந்த 'கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ்' (ஜிஆர்எஸ்இ) நிறுவனத்தால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட, நீர்மூழ்கி எதிர்ப்புப் போர் நடவடிக்கைகளுக்கான ஆழ்கடல் அல்லாத பகுதிகளில் பயன்படுத்தப்படும் கப்பல்களுள் ஒன்றான 'அஷங்க்', 2026 நவம்பர் 23 அன்று விசாகப்பட்டினத்தில் இந்தியக் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
நவீன இலகுரக டார்பிடோக்கள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ராக்கெட் ஏவுதளங்கள், மேம்பட்ட சோனார் அமைப்புமுறைகளைக் கொண்ட 'யார்டு 3036 - அஷங்க்' கப்பல், கடற்படையின் நீருக்கடியிலான கண்காணிப்பு, நீர்மூழ்கி எதிர்ப்புப் போர் நடவடிக்கைகளை, குறிப்பாகக் கடலோரப் பகுதிகளில் வலுப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு வலிமையான தளமாகும். வாட்டர்ஜெட் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் இந்தியக் கடற்படை போர்க்கப்பல்களில், இவை மிகப்பெரிய கப்பல் வகைகளில் அடங்கும்.
‘அஷங்க்’ கப்பலின் ஒப்படைப்பு, இந்தியக் கடற்படையின் உள்நாட்டு கப்பல் கட்டுமான முயற்சியில் மற்றுமொரு மைல்கல்லாகும். இது, தற்சார்பு இந்தியா குறித்த அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப அமைந்துள்ளது. 80 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டு உதிரிபாகங்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கப்பல், உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்திச் சூழலியலின் வளர்ந்து வரும் வலிமைக்கும், இறக்குமதியைச் சார்ந்திருக்கும் தன்மையைக் குறைப்பதற்கும் ஒரு சான்றாகத் திகழ்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2340597®=3&lang=1
SK/BR/SH