இடுகை இடப்பட்ட நாள்:
24 NOV 2026 5:13PM by PIB Chennai
தனியார் துறையின் தீவிர பங்களிப்பால், தற்போது சுமார் 9 பில்லியன் டாலராக உள்ள இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் 40-45 பில்லியன் டாலராக வளரும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் நடைபெற்ற 5-வது இந்திய சர்வதேச விண்வெளி மாநாடு 2026-ல் உரையாற்றிய அவர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் சீர்திருத்தங்களால், இந்தியாவின் விண்வெளி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலிருந்து 400-500 நிறுவனங்களாக உயர்ந்துள்ளது என்றார். இந்நிகழ்வில் ‘விண்வெளிப் பொருளாதாரம் 2036’ என்ற அறிக்கையும் வெளியிடப்பட்டது.
இன்-ஸ்பேஸ் மற்றும் நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் ஆகியவற்றின் உருவாக்கம் விண்வெளித் துறையில் தனியார் முதலீடுகளை ஊக்குவித்துள்ளது. ஸ்கைரூட் மற்றும் அக்னிகுல் போன்ற நிறுவனங்களின் சாதனைகளைப் பாராட்டிய அமைச்சர், விண்வெளித் தொழில்நுட்பம் செயற்கைக்கோள் ஏவுதலுடன் நின்றுவிடாமல், ‘பிரதமரின் கதி சக்தி’ திட்டம், ரயில்வே, பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் செலவுகளைக் குறைத்துப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாகக் கூறினார்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு நிறுவனங்கள் தங்களது பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியை அதிகளவில் ஒதுக்க வேண்டும் என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கேட்டுக்கொண்டார்.
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2340845®=3&lang=1
****
SK/NB/SH