பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய விண்வெளி வீரர்களுக்கான மருத்துவ சங்கத்தின் 65-வது ஆண்டு மாநாடு பெங்களூருவில் நடைபெற உள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 24 NOV 2026 11:38AM by PIB Chennai

இந்திய விண்வெளி வீரர்களுக்கான மருத்துவ சங்கத்தின் 65-வது ஆண்டு மாநாடு, பெங்களூருவில் உள்ள விண்வெளி மருத்துவ நிறுவனத்தில் 2026 நவம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 'ஒரே விண்வெளி - ஒரே இலக்கு: ஓடுபாதை முதல் விண்வெளி சுற்றுப்பாதை வரை விண்வெளி வீரர்களுக்கான  மருத்துவ உதவி' என்ற கருப்பொருளில் நடைபெறும் இம்மாநாட்டை, விமானப்படைத் தளபதி அசுதோஷ் தீட்சித் தொடங்கி வைக்கிறார்.

ராணுவம், சிவில் விமானப் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள், விமானப்படை வீரர்கள், டிஆர்டிஓ விஞ்ஞானிகள் உள்ளிட்ட சுமார் 250 பிரதிநிதிகள் இதில் பங்கேற்க உள்ளனர். ஏர் மார்ஷல் சுப்ரதோ முகர்ஜி நினைவுச் சொற்பொழிவை இராணுவ வான் தகுதி மற்றும் சான்றளிப்பு மையம் (செமிலாக்) தலைமைச் செயல் அதிகாரி திரு ஏபிவிஎஸ் பிரசாத்தும், ஏர் வைஸ் மார்ஷல் ஸ்ரீநாகேஷ் நினைவுச் சொற்பொழிவை ஓய்வு பெற்ற ஏர் வைஸ் மார்ஷல் அனுபம் அகர்வாலும் வழங்குகின்றனர். மேலும், விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா நினைவாக இந்த ஆண்டு தொடங்கப்படும் சிறப்புச் சொற்பொழிவுத் தொடரின் தொடக்க உரையை ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் தலைமைச் செயல் அதிகாரி திரு பவன் குமார் சந்தனா ஆற்றுகிறார்.

இந்த மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. மேலும், அதிநவீன வான்வெளி மருத்துவ உபகரணங்கள், உயிரி மருத்துவக் கருவிகள் அடங்கிய அறிவியல் கண்காட்சியும் இடம்பெறுகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2340726&reg=3&lang=1

****

TV/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2340819) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati