இடுகை இடப்பட்ட நாள்:
23 NOV 2026 6:48PM by PIB Chennai
நிலக்கரி, பழுப்பு நிலக்கரி சுரங்கங்களுக்கான திட்டங்களைத் தயாரித்தல், சுரங்கங்களை மூடுவதற்கான திட்டம் உருவாக்குதல் ஆகியவை தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த நெறிமுறைகள் 2026 நவம்பர் 20 அன்று வெளியிடப்பட்டன. வெளியிடப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குப் பிறகு இது நடைமுறைக்கு வரும்.
சுரங்கத் திட்டமிடல், சுரங்கங்களை மூடுதல் ஆகியவற்றை அறிவியல் அடிப்படையில் முறையாக மேற்கொள்வதற்கான வழிமுறைகள் இதில் இடம்பெற்றுள்ளன. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சட்ட விதிமுறைகளுடன் இணைந்து செயல்படும் வகையில் இவை உருவாக்கப்பட்டுள்ளன.
திட்டங்களை ஆய்வு செய்தல், ஒப்புதல் வழங்குதல் ஆகிய ஒவ்வொரு நிலையிலும் குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நிலத்தடியில் நிலக்கரியை வாயுவாக மாற்றும் தொழில்நுட்பமும் சுரங்க முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான 2026-ம் ஆண்டு வழிகாட்டு நெறிமுறைகளும் புதிய விதிமுறைகளில் இணைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் சுரங்கப் பணிகளை விரைவாகத் தொடங்குவதுடன், தொழில் செய்வதை எளிதாக்கவும், நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் முடியும் என நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுரங்கங்களை அறிவியல் முறையில் மூடி, அந்தப் பகுதிகளை உள்ளூர் மக்களின் நலனுக்காகப் பயன்படுத்துவதற்கும் இந்த நெறிமுறைகள் உதவும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2340492®=3&lang=1
(Release ID : 2340492)
****
SK/PLM/SH