கோவாவில் நடைபெறும் 57-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் (ஐஎஃப்எஃப்ஐ) ‘காப்பிய வகைப்பாடுகள் – புராணங்கள், சூப்பர் ஹீரோக்கள் மற்றும் புதிய உலகங்கள்’ என்ற தலைப்பிலான கலந்துரையாடல் அமர்வவு நடைபெற்றது. இதில் இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தில் வேரூன்றிய புராணங்கள், சூப்பர் ஹீரோக்கள், கற்பனை உலகங்கள் குறித்த வியக்கத்தக்க சாத்தியக்கூறுகள் முதலியவை குறித்துப் பேசப்பட்டது . இந்த அமர்வில், திரைப்படத் தயாரிப்பாளர்கள் அயன் முகர்ஜி, பேசில் ஜோசப் ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள், சூப்பர் ஹீரோக்கள், புராணக் கதைகளைத் திரையில் கொண்டு வருவதில் உள்ள படைப்பாற்றல் சவால்கள், இந்திய நாட்டுப்புறக் கதைகள் மற்றும் ஆன்மீகத்தின் தாக்கம், திரைப்படக் கதையாடலில் தொழில்நுட்பத்தின் வளர்ந்து வரும் பங்கு குறித்து விரிவாக உரையாடினர்.
இந்தியாவில் சூப்பர் ஹீரோ திரைப்படங்களை உருவாக்குவதில் உள்ள சவால்கள் குறித்துப் பேசிய பேசில் ஜோசப், இந்தியத் திரையுலகில் நாயகர்கள் பாரம்பரியமாகவே மிகைப்படுத்தப்பட்ட பிம்பங்களுடன், பெரும்பாலும் சூப்பர் ஹீரோக்களுக்குரிய பண்புகளைக் கொண்டவர்களாகவே சித்தரிக்கப்பட்டு வருகிறார்கள் என்று குறிப்பிட்டார். சாதாரண மனிதர்களுக்குள் அசாதாரண ஆற்றல்கள் இருக்கக்கூடும் என்ற கருத்தாக்கமே, சூப்பர் ஹீரோ வகை கதைகளின் மீது தனது ஆர்வத்தைத் தூண்டியதாக அயன் முகர்ஜி தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2340511®=3&lang=1
****
SK/BR/SH