நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிலக்கரி ஆய்வு நிறுவனங்களுக்கான அங்கீகாரக் காலம் 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக நீட்டிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 23 NOV 2026 6:48PM by PIB Chennai

நிலக்கரித் துறை அமைச்சகம், கனிமச் சலுகை விதிகள், 1960-ல் மூன்றாவது திருத்தத்தை மேற்கொண்டுள்ளது. இதற்கான அறிவிக்கை, 2026 நவம்பர் 17 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, அங்கீகாரம் பெற்ற கனிம ஆய்வு நிறுவனங்கள், சுரங்கத் திட்டங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் ஆகியவற்றின் அங்கீகாரக் காலம் 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தால், அவ்வப்போது மேற்கொள்ளப்படும் மதிப்பீடுகள், அங்கீகாரத்தைப் புதுப்பிக்கும் நடைமுறைகள் குறையும். இதனால், மீண்டும் மீண்டும் மதிப்பீடு செய்வதற்கும் அங்கீகாரம் பெறுவதற்கும் செலவிடும் நேரம் மிச்சமாகும்.

மேலும், புவியியல் ஆய்வு அறிக்கைகள், சுரங்கத் திட்டங்களைத் தொடர்ந்து தயாரிப்பது ஆகியவற்றுக்கு இந்த நீண்டகால அங்கீகாரம் உதவும். நிலக்கரி, பழுப்பு நிலக்கரிச் சுரங்கப் பகுதிகளைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர ஆய்வு நிறுவனங்களின் அறிக்கைகளும் செயல் திட்டங்களும் அவசியமாகும்.

நிலக்கரித் துறையில் தொழில் தொடங்குவதை எளிதாக்க இந்த நடவடிக்கை முக்கிய முன்னேற்றமாக அமைந்துள்ளது என நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2340491&reg=3&lang=1

(Release ID : 2340491)

****

SK/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2340615) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी