சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
23 NOV 2026 5:04PM by PIB Chennai
சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பில், புதுதில்லியில் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. 2026 நவம்பர் 2-ம் தேதி தொடங்கிய இக்கண்காட்சியில், ஏராளமான கைவினைப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்தியாவின் பாரம்பரிய கைவினை கலைஞர்கள், தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த கண்காட்சி நடத்தப்பட்டது. கைவினை கலைஞர்களையும் கலாச்சார பாரம்பரியத்தையும் ஒன்றிணைக்கும் வகையில் நடைபெற்ற இக்கண்காட்சியிக்கு வருகைதந்த மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமார், அரங்குகளை பார்வையிட்டு, கைவினை கலைஞர்களுடன் உரையாடினார். கைவினை கலைஞர்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இக்கண்காட்சி பயனுள்ளதாக அமைந்ததாக தெரிவித்தார். 15 நாட்கள் நடைபெற்ற கைவினை பொருட்கள் கண்காட்சிக்கு ஏராளமான பார்வையாளர்கள் வருகைதந்தனர். இதன்மூலம், கைவினை கலைஞர்களுக்கு 1.13 கோடி ரூபாய் வருவாய் கிடைத்ததாக சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2340403®=3&lang=1
****
SK/LN/SH