57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

அசாமி திரைப்படம் வலிமையான மறுமலர்ச்சியை காண்கிறது: தயாரிப்பாளர் அந்தரா ஜிஜி சௌத்ரி

இடுகை இடப்பட்ட நாள்: 23 NOV 2026 6:00PMby PIB Chennaiவெளியீட்டு அடையாள எண்: 2340557Views: 4

பிராந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் பார்வையாளர்களை ஈர்க்கக்கூடிய கதைகளை அதிகளவில் காட்சிப்படுத்துவதால், அசாமி திரைப்படம் ஒரு வலிமையான மறுமலர்ச்சியைக் கண்டுவருவதாக திரைப்படத் தயாரிப்பாளர் அந்தரா ஜி.ஜி. சௌத்ரி கூறியுள்ளார்.

கோவாவில் நடைபெற்றுவரும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின்  ஒரு பகுதியாக, தனது அசாமி திரைப்படமான 'சூர்யமுகி' குறித்து பத்திரிகை தகவல் அலுவலகத்தின் ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார்.

இந்தத் திரைப்படம், உத்பால் என்ற சிறுவனின் வாழ்க்கையை 40 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரும்பிப்பார்க்க வைக்கிறது. மனிதனின் தேர்வுகள் எவ்வாறு வாழ்க்கையை வடிவமைத்து, நீடித்த விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை இது ஆராய்கிறது. 'சூர்யமுகி' திரைப்படம் நவம்பர் 22 அன்று கோவாவில் நடைபெறும் திரைப்பட விழாவில் உலகளவில் முதன்முறையாக திரையிடப்பட்டது.

இந்தத் திரைப்படம் குறித்துப் பேசிய இயக்குநர், கதையின் எளிமையும், 'சூர்யமுகி'-ன்  கவரக்கக்கூடிய முக்கியக் கதாபாத்திரமும் தன்னை ஈர்த்ததாக குறிப்பிட்டார். திரைப்படத்தின் உலகளாவிய வரவேற்பை எடுத்துரைத்த சௌத்ரி, அதன் முக்கிய அம்சங்கள் பல்வேறு பின்னணிகளைக் கொண்ட பார்வையாளர்களிடம் எதிரொலிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அசாமி திரைப்படத்தின் மாறிவரும் சூழல் குறித்தும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2340463&reg=3&lang=1

****

SK/IR/LDN/SH


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2340557
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026