தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொலைத்தொடர்புத்துறை புத்தொழில் மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மாநாடு 2026: மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தலைமை

இடுகை இடப்பட்ட நாள்: 23 NOV 2026 5:09PM by PIB Chennai

மத்திய தொலைத்தொடர்பு, வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில், தொலைத்தொடர்புத்துறை புத்தொழில் மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மாநாடு 2026, புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நாளை (2026 நவம்பர் 24) நடைபெற உள்ளது.

மத்திய தொலைத்தொடர்புத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மாநாடு, தொலைத்தொடர்புத் துறையைச் சேர்ந்த புத்தொழில் நிறுவனங்கள், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழில்துறைத் தலைவர்கள், முதலீட்டாளர்கள், கல்வியாளர்களை ஒன்றிணைத்து உள்நாட்டுத் தொலைத்தொடர்புத் தொழில்நுட்பங்களைக் காட்சிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உள்நாட்டுக் கண்டுபிடிப்பாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், தொழில்நுட்பங்களை வணிகமயமாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து இதில் விவாதிக்கப்பட உள்ளது.

இந்நிகழ்வில் ரான், கோர், செயலிகள், சிப் தொகுப்புகள், பாதுகாப்பு, தரநிலைகள் ஆகிய ஐந்து முக்கியத் துறைகள் குறித்த விளக்கக்காட்சிகள் இடம்பெறும். மேலும், புத்தொழில் நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகளைக் காட்சிப்படுத்த பிரத்யேக அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. தொலைத்தொடர்பு சட்டம் 2023-ன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள கொள்கைக் கட்டமைப்புகள், ஆராய்ச்சி, மேம்பாட்டை ஊக்குவிக்கும் மத்திய அரசின் முன்முயற்சிகள் குறித்தும் இம்மாநாட்டில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2340401&reg=3&lang=1

****

SK/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2340549) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Kannada