அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

பிரபஞ்சத்தின் முதல் தலைமுறை நட்சத்திரங்கள் குறித்த தடயங்களைக் கொண்ட அரிய பழங்கால நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்

இடுகை இடப்பட்ட நாள்: 23 NOV 2026 3:46PM by PIB Chennai

பிரபஞ்சத்தின் ஆரம்பகாலத் தலைமுறை நட்சத்திரங்களின் வேதியியல் தடயங்களைக் கொண்ட எச்இ 1153-0518 என்ற அரிய பழங்கால நட்சத்திரத்தை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். சூரியனில் உள்ள இரும்பின் அளவில் ஆயிரத்தில் ஒரு பங்கை மட்டுமே கொண்டுள்ள இந்த நட்சத்திரத்தில் கார்பன், சோடியம் அதிகமாகவும், கனமான தனிமங்கள் குறைவாகவும் உள்ளன.

மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் கீழ் பெங்களூருவில் செயல்பட்டு வரும் இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களும், அசாமின் தக்ஷின் காம்ரூப் கல்லூரி ஆய்வாளர்களும் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர். ஹவாயில் உள்ள சுபாரு தொலைநோக்கியின் தரவுகளைப் பயன்படுத்தி இந்த நட்சத்திரத்தின் பண்புகள் துல்லியமாகக் கணக்கிடப்பட்டுள்ளன.

அருணா கோஸ்வாமி, பார்த்தா பிரதிம் கோஸ்வாமி ஆகியோரின் இந்த ஆய்வு முடிவுகள் ராயல் வானியல் சங்கத்தின் மாதாந்திர அறிவிப்புகள் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளன. சூரியன் உருவாவதற்கு முன்பாக, சுமார் 1,300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த நட்சத்திர உருவாக்கம், பால்வெளி மண்டலத்தின் ஆரம்பகால வரலாற்றைப் புரிந்துகொள்ள இக்கண்டுபிடிப்பு உதவுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2340331&reg=3&lang=1

****

SK/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2340531) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी