அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

சூரிய ஒளியைப் பயன்படுத்தி மாசுக்களைச் சிதைவுறச் செய்யும் புதிய மேம்பட்ட பொருளை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்

இடுகை இடப்பட்ட நாள்: 23 NOV 2026 3:49PM by PIB Chennai

உலோக நானோ கம்பிகளை உலோக-கரிம கட்டமைப்புகளில் இணைத்து விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள புதிய மேம்பட்ட பொருள், சூரிய ஒளியைப் பயன்படுத்தி பைரீன் போன்ற சுற்றுச்சூழல் மாசுக்களைத் திறம்படச் சிதைவுறச் செய்யும் ஆற்றல் கொண்டது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் கீழ் குவஹாத்தியில் செயல்பட்டு வரும் அறிவியல், தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் இப்புதிய கலப்புப் பொருளை உருவாக்கியுள்ளனர். தாமிர நானோ கம்பிகளுடன் பல்லேடியம் நானோ கட்டமைப்புகளை இணைத்து உருவாக்கப்பட்ட பொருள் 99% மாசுக்களையும், குறைந்த செலவிலான அலுமினியத்தை இணைத்து உருவாக்கப்பட்ட பொருள் 85% பைரீன் மாசுக்களையும் நீக்கியுள்ளன.

பேராசிரியர் தேவாஷிஷ் சௌவுத்ரி தலைமையிலான குழுவினரின் இந்த ஆய்வு முடிவுகள் ஏசிஎஸ் அப்ளைடு எனர்ஜி மெட்டீரியல்ஸ் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளன. நீர்நிலைகளில் உள்ள மாசுக்களை அகற்ற, விலை உயர்ந்த உலோகங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க இத்தொழில்நுட்பம் பெரிதும் உதவும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2340334&reg=3&lang=1

****

SK/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2340523) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी