சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் முதலாவது மனித வளர்ச்சிதை மாற்றப் பிரிவு வசதி வேலூரில் உள்ள கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 23 NOV 2026 4:23PM by PIB Chennai

இந்தியாவின் முதலாவது மனித வளர்ச்சிதை மாற்றப் பிரிவு வசதியை வேலூரில் உள்ள கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் (சிஎம்சி) மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திருமதி புன்ய சலிலா ஸ்ரீவஸ்தவா இன்று தொடங்கி வைத்தார். டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனமும், வேலூர் சிஎம்சி-யும் இணைந்து அமைத்துள்ள இந்த வசதி மனித வளர்ச்சிதை மாற்றம், ஊட்டச்சத்து, நீரிழிவு, உடல் பருமன், இதர வளர்ச்சிதை மாற்றங்கள் தொடர்பான ஆராய்ச்சியை வலுப்படுத்தும். இம்முயற்சி அனைவருக்கும் நோய் தடுப்பு, சுகாதார நலனை வலுப்படுத்தி ஆரோக்கியமான, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கேற்ப அமைந்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய திருமதி ஸ்ரீவஸ்தவா, இம்முயற்சிக்காக டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம், வளர்ச்சிதை மாற்றம், வளர்ச்சி, முதுமை தொடர்பான மேம்பட்ட ஆராய்ச்சிப் பிரிவு, வேலூர் சிஎம்சி ஆகிய நிறுவனங்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த ஒருங்கிணைப்புக்கு ஆதரவளித்த அணுசக்தி துறைக்கும் பாராட்டு தெரிவித்தார்.

மற்ற நாடுகளின் கண்டுபிடிப்புகள் இந்திய மக்கள் தொகையின் பன்முகத்தன்மை, குறிப்பிட்ட இடர்பாடுகள் குறித்த விவரங்களை போதிய அளவில் பிரதிபலிக்காமல் இருக்கலாம் என்று கூறிய அவர், அதற்கான சான்றுகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

மனித வளர்ச்சிதை மாற்றத் தொகுப்பு என்பது ஒரு கலோரி மீட்டர் அளவீடாகும். இவ்வாறு ஒரு தன்னார்வலர் 24 மணிநேரம் அல்லது அதற்கு மேலாக உணவு உட்கொண்டு உறங்கும்போது ஆக்சிஜன் நுகர்வு, கார்பன் டை ஆக்ஸைடு உற்பத்தி ஆகியவற்றை அளவிடுகிறது. இந்த அளவீடுகள் மொத்த ஆற்றல் செலவினத்தையும், உணவு, உடல் செயல்பாடு, உறக்கம் ஆகிய நடவடிக்கைகளின்போது கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகளை உடல் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை அறிய உதவுகின்றன.

இந்த வசதி வளர்ச்சிதை மாற்றம், வளர்ச்சி, முதுமை தொடர்பான மேம்பட்ட ஆராய்ச்சிப் பிரிவின் ஊட்டச்சத்து, வளர்ச்சிதை மாற்ற ஆராய்ச்சிக்கான தேசிய பகுப்பாய் வசதிக்கு துணையாக உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2340358&reg=3&lang=1

***

SS/IR/LDN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2340490) வருகையாளர் எண்ணிக்கை : 3
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी